தமிழ் நடுத்தெருவில் நில் யின் அர்த்தம்

நடுத்தெருவில் நில்

வினைச்சொல்நிற்க, நின்று

  • 1

    ஆதரவற்ற நிலைக்கு உள்ளாதல்.

    ‘நீங்கள் இப்படிக் குடித்துக்கொண்டிருந்தால் நானும் என் பிள்ளைகளும் நடுத்தெருவில் நிற்க வேண்டிவரும்’
    ‘தொழிற்சாலையை மூடிவிட்டால் தொழிலாளர்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டியதுதான்’
    ‘என் கணவருக்கு வேலை போய் நாங்கள் நடுத்தெருவில் நின்றபோது நீங்கள் உதவியதை நான் மறக்கவில்லை’