தமிழ் நடுவர் யின் அர்த்தம்

நடுவர்

பெயர்ச்சொல்

 • 1

  உயர் வழக்கு நீதிபதி.

  ‘இப்போது உயர் நீதிமன்றங்களைத் தவிர்த்த நீதிமன்றங்களில் நடுவர்கள் தமிழிலேயே தம் தீர்ப்பை அளிக்கலாம்’
  ‘ஒருவரைக் கைதுசெய்தவுடன் 24 மணி நேரத்திற்குள் அவரை அருகே உள்ள குற்றவியல் நடுவர் முன் ஆஜர்படுத்த வேண்டும்’

 • 2

  ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டவர்களுக்கு இடையே எழும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, அவர்கள் ஏற்றுக் கொண்ட வகையில் நியமிக்கப்படும் நபர்.

  ‘பிரச்சினையை நடுவர் மூலமாகத் தீர்த்துக்கொள்ள இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்’

 • 3

  (பேச்சுப் போட்டி, பட்டிமன்றம் போன்றவற்றில் குறிப்பிட்ட தர அடிப்படையின் கீழ்) வெற்றிபெற்றவராக ஒருவரை அல்லது வெற்றிபெற்றதாக ஒன்றைத் தேர்ந்தெடுப்பவர்.

  ‘சிறுகதைப் போட்டிக்கு நடுவராக பிரபல எழுத்தாளர் நியமிக்கப்பட்டுள்ளார்’
  ‘போட்டிக்கு வரும் விண்ணப்பங்கள் நடுவரால் பரிசீலிக்கப்படும்’

 • 4

  (விளையாட்டுப் போட்டிகளில்) இரு தரப்புக்கும் பொதுவாக இருந்து முடிவுகளை அறிவித்தல், விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதைக் கண்காணித்தல் போன்ற பொறுப்புகளை ஏற்றிருப்பவர்.

  ‘உலகக் கோப்பைப் போட்டிக்கு இந்தியர் ஒருவர் நடுவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்’
  ‘விளையாட்டைத் தொடர்ந்து நடத்த மைதானம் ஏற்றதாக இருக்கிறதா என்பதைத் தீர்மானிப்பவர் நடுவர்தான்’