நடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நடை1நடை2

நடை1

பெயர்ச்சொல்

 • 1

  நடந்து செல்லும் செயல்.

  ‘அவனது நடையில் வேகம் இல்லை’
  ‘குழந்தைகளுக்கு நடை பழக்குவதற்கு நடைவண்டியைப் பயன்படுத்துகிறார்கள்’

 • 2

  (ஓர் இடத்திற்குச் செல்வதைக் குறிக்கும்போது) ஒரு முறை; தடவை.

  ‘கடைக்கு ஒரு நடை போய் வந்து விடு’
  ‘மூன்றே நடையில் கதிர்க் கட்டுகள் எல்லாம் வீட்டுக்கு வந்துவிட்டன’

 • 3

  (எழுத்தில், பேச்சில்) பிறவற்றிலிருந்து அல்லது பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காணக்கூடிய, குறிப்பிட்ட தன்மைகளைக் கொண்ட முறை; பாணி.

  ‘கண்ணதாசன் எளிய நடையில் பாடல்கள் எழுதிப் புகழ் பெற்றவர்’
  ‘அறிவியல் கட்டுரைக்கு என்றே அமைந்த நடை’

 • 4

  இசைத்துறை
  தாளத்தில் ஒவ்வொரு அட்சரத்திலும் இடம்பெற வேண்டிய அட்சரப் புள்ளிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்கக்கூடிய அமைப்பு/சங்கதியைப் போல், தாளத்தில் சொற்கட்டுகளைப் பல விதமாக வாசித்தல்.

நடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நடை1நடை2

நடை2

பெயர்ச்சொல்

 • 1

  வீட்டின் வெளிவாசலிலிருந்து மற்ற பகுதிகளுக்குச் செல்வதற்கு உரிய பாதை.

  ‘அவளுக்குப் பதில் எதுவும் சொல்லாமல் அறையை விட்டு நடைக்கு வந்தேன்’
  ‘நடையில் கிடந்த ஆங்கில தினசரியை எடுத்துக்கொண்டு உள்ளே போனான்’

 • 2

  (கோயிலின்) முன்கதவு.

  ‘இரவு எட்டு மணிக்குக் கோயிலில் நடையைச் சாத்திவிடுவார்கள்’