தமிழ் நடைமுறை யின் அர்த்தம்

நடைமுறை

பெயர்ச்சொல்

 • 1

  அன்றாட வாழ்க்கை நிலைமைகளைச் சார்ந்திருப்பது.

  ‘அறிவுரை கூறுவது எளிது. அதை நடைமுறையில் கடைப்பிடிக்க முடியுமா என்பது சந்தேகமே’
  ‘நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்’
  ‘நடைமுறை வாழ்க்கை’
  ‘நடைமுறைப் பிரச்சினைகள்’
  ‘இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன’

 • 2

  பழக்கத்தில் இருந்துவருவது; வழக்கமாகக் கடைப்பிடிக்கப்படுவது.

  ‘விமானப் பயணிகளின் பாதுகாப்பிற்காகப் பல ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளன’
  ‘கடன் நிவாரணம் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருவதுதான்’
  ‘காலையில் நீராகாரம் சாப்பிடுவது என்பது இன்றைக்கும் கிராமங்களில் உள்ள நடைமுறை’

 • 3

  (ஒரு செயலைச் செய்யும்போது பின்பற்றும்) வழிமுறை.

  ‘நாடக நடிகர்களுக்கு மேடை நடைமுறைபற்றிய பயிற்சி தரப்படுகிறது’
  ‘இவை நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்’
  ‘கல்வி கற்பிப்பதில் புதிய நடைமுறைகள் தேவைப்படுகின்றன’
  ‘சர்வதேச நடைமுறைகளை எல்லா நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று ஐ.நா. சபை அறிவுறுத்தியது’