தமிழ் நடைமுறைப்படுத்து யின் அர்த்தம்

நடைமுறைப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (ஆட்சி, திட்டம், சட்டம் போன்றவற்றை) நடைமுறைக்குக் கொண்டுவருதல்; அமல்படுத்துதல்; செயல்படுத்துதல்.

    ‘பல வளர்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கின்றன’
    ‘சுற்றுச்சூழல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசு மெத்தனமாக இருக்கக் கூடாது’