தமிழ் நடையைக்கட்டு யின் அர்த்தம்

நடையைக்கட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஒரு இடத்தை விட்டு நீங்குதல் அல்லது புறப்படுதல்.

    ‘வந்த வேலை முடிந்து விட்டதல்லவா, நீ நடையைக்கட்டு’
    ‘முதல் பந்தியில் சாப்பிட்டுவிட்டு நடையைக்கட்ட வேண்டியதுதான்’