தமிழ் நட்புறவு யின் அர்த்தம்

நட்புறவு

பெயர்ச்சொல்

  • 1

    (நபர்கள் அல்லது நாடுகளுக்கு இடையிலான) நேச உறவு.

    ‘பல வருட நட்புறவில் அவ்வாறு அவர் கோபத்துடன் பேசியது அதுவே முதல் முறை ஆகும்’
    ‘எங்கள் இருவருக்கும் இடையில் கொள்கை அளவில் வேறுபாடுகள் இருந்தாலும், மரியாதை கலந்த நட்புறவு உண்டு’
    ‘ஆசியாவில் அமைதி நிலவ வேண்டுமானால் அண்டை நாடுகளுடனான நட்புறவு வலுவடைய வேண்டும்’