தமிழ் நீண்ட யின் அர்த்தம்

நீண்ட

பெயரடை

 • 1

  (நீளத்தில் அல்லது காலத்தில்) சராசரி அளவைவிட அதிகமான அல்லது பெரிய.

  ‘நீண்ட கடிதம்’
  ‘நீண்ட கூந்தல்’
  ‘நீண்ட காலக் கடன் திட்டங்கள்’
  ‘நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம்’
  ‘நண்பரைச் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகின்றன’