தமிழ் நன்கொடை யின் அர்த்தம்

நன்கொடை

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுக் காரியங்களுக்காக அல்லது கோயில், கல்வி நிறுவனம் போன்றவற்றுக்கு) மனம் உவந்து வழங்கும் தொகை அல்லது பொருள்.

    ‘சில பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு நன்கொடை வசூலிக்கிறார்கள்’
    ‘தான் சேர்த்த புத்தகங்களையெல்லாம் பொது நூலகத்திற்கு நன்கொடையாகக் கொடுத்துவிட்டார்’
    உரு வழக்கு ‘பூஜ்யம் என்பது கணிதத்திற்கு இந்தியா வழங்கிய நன்கொடை’