தமிழ் நன்றாக யின் அர்த்தம்

நன்றாக

வினையடை

 • 1

  முழுமையாக.

  ‘கதவை நன்றாகத் திறந்து வை’
  ‘கம்பியை நன்றாக உயர்த்திப் பிடி’
  ‘மூலிகைகளை நிழலில் நன்றாகக் காயவைக்க வேண்டும்’
  ‘நான் சொன்னதை நன்றாக யோசித்துப்பார்’
  ‘கணக்கை நன்றாகச் சரி பார்த்துக்கொள்’

 • 2

  சிறப்பாக.

  ‘திருமணம் நன்றாக நடந்தது’
  ‘நன்றாகப் படி’

 • 3

  மகிழ்ச்சி தரத் தக்கதாக.

  ‘அப்பா மட்டும் இப்போது நம்மோடு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?’
  ‘காஷ்மீர் பயணம் நன்றாக இருந்தது’

 • 4

  பெரும்பாலும் ஆதங்கம், வெறுப்பு, சலிப்பு போன்ற உணர்வுகளைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் வினையடை.

  ‘உனக்கு உதவி செய்ய நினைத்தேன் பார்; எனக்கு நன்றாக வேண்டும்’

 • 5

  ஏற்றுக்கொள்ளத் தக்கதாக.

  ‘பெரியவரை இங்கே வரச் சொல்வது அவ்வளவு நன்றாக இல்லை’
  ‘நீ அவனிடம் அப்படிப் பேசியது நன்றாக இல்லை’