தமிழ் நன்று யின் அர்த்தம்

நன்று

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு நல்லது.

  ‘அதிகாலையில் நடைப்பயிற்சி செய்வது நன்று’
  ‘இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பது நன்று’
  ‘நோயின் தன்மை, அது எப்படி உடலைத் தாக்குகிறது என்பதை அறிந்துகொள்வது நன்று’
  ‘இந்த விஷயத்தில் பொதுமக்களின் கருத்தைக் கேட்பது நன்று’
  ‘துணைநூற்பட்டியலை முழுமையாகத் தருவது நன்று’

தமிழ் நன்று யின் அர்த்தம்

நன்று

இடைச்சொல்

 • 1

  பாராட்டைத் தெரிவிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘கவியரங்கத்தில் ‘நன்று, நன்று’ எனப் பலர் கூறுவது கேட்டது’