நனை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நனை1நனை2

நனை1

வினைச்சொல்நனைய, நனைந்து, நனைக்க, நனைத்து

 • 1

  (தண்ணீர், எண்ணெய் முதலிய திரவப் பொருள்களால் ஒன்று) ஈரமாதல்; (மேற்சொன்னவற்றில் ஒன்று) தோய்தல்.

  ‘வீட்டுக்கு வரும்போது மழையில் நனைந்துவிட்டேன்’
  ‘துணி இரத்தத்தில் நனைந்துவிட்டது’

 • 2

  அருகிவரும் வழக்கு ஊறுதல்.

  ‘துணி சற்று நேரம் நனையட்டும்’

நனை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நனை1நனை2

நனை2

வினைச்சொல்நனைய, நனைந்து, நனைக்க, நனைத்து

 • 1

  முழுமையாக ஈரமாக்குதல்; (நீரில்) தோய்த்தல்.

  ‘துணிகளைச் சாயத்தில் நனைத்துக் காயவைத்தார்கள்’
  ‘தலையை நனைக்காமல் குளித்து விட்டு வா’
  ‘பட்டுப்புடவையை அடிக்கடி நனைப்பதில்லை’