தமிழ் நன்றி யின் அர்த்தம்

நன்றி

பெயர்ச்சொல்

 • 1

  ஒருவர் செய்த நன்மைக்காக, உதவிக்காக அல்லது செலுத்திய அன்பு போன்றவற்றுக்காக அவரிடம் காட்டும் உணர்வு; விசுவாசம்.

  ‘உனக்கு எவ்வளவு செய்திருக்கிறேன்; நன்றி இல்லாமல் இப்படிப் பேசுகிறாயே?’

 • 2

  மேற்குறிப்பிட்ட மரியாதை உணர்வையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்துவதற்கான சொல்.

  ‘‘தக்க சமயத்தில் பணம் தந்து உதவினீர்கள், நன்றி’ என்றார்’
  ‘கூட்டத்தின் முடிவில் செயலாளர் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்’