தமிழ் நப்பாசை யின் அர்த்தம்

நப்பாசை

பெயர்ச்சொல்

 • 1

  (நிறைவேறாது அல்லது நிறைவேறுவது கடினம் என்று தெரிந்தும்) ஒன்று எப்படியாவது நிகழாதா என்ற எதிர்பார்ப்பு.

  ‘இந்த வேலையாவது எனக்குக் கிடைக்காதா என்கிற நப்பாசை’
  ‘ஊரை விட்டுப் போகும் முன் கடைசியாக அவளை ஒருமுறை பார்க்க முடியாதா என்ற நப்பாசை என் மனத்தில் எழுந்தது’
  ‘கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற நப்பாசையில்தான் எல்லோரும் லாட்டரிச் சீட்டு வாங்குகிறார்கள்’
  ‘எப்படியாவது வெளிநாடு போய்விட வேண்டும் என்ற நப்பாசையில் ஒருவரிடம் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து அவன் ஏமாந்தான்’