தமிழ் நம்பு யின் அர்த்தம்

நம்பு

வினைச்சொல்நம்ப, நம்பி

 • 1

  தான் விரும்புவதுபோல் ஒன்று நடக்கும் அல்லது ஒருவர் செயல்படுவார் என்று உறுதியான எண்ணம் கொள்ளுதல்.

  ‘அவரை நம்பி எவ்வளவு வேண்டுமானாலும் பணம் கொடுக்கலாம்’
  ‘எங்கள் காதலை அப்பா ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறேன்’
  ‘நாளைக்கு நிச்சயம் பணம் கிடைத்துவிடும் என்று நம்புகிறேன்’
  ‘நல்லதே நடக்கும் என்று நம்புவோம்’

 • 2

  (ஒரு கருத்து, நிகழ்வு முதலியவை) உண்மை என்று உறுதியாக நினைத்தல்.

  ‘பூமி தட்டையானது என்று ஒரு காலத்தில் மக்கள் நம்பினார்கள்’
  ‘பத்திரிகையில் அவரைப் பற்றி வந்துள்ள செய்திகளை நான் நம்பத் தயாராக இல்லை’
  ‘நான் அமெரிக்கா போயிருக்கிறேன் என்று சொன்ன பொய்யை அவள் நம்பிவிட்டாள்’

 • 3

  (ஒருவரையோ ஒன்றையோ) சார்ந்திருத்தல்.

  ‘என் மகளை நம்பித்தான் எங்கள் குடும்பமே இருக்கிறது’
  ‘உன்னையே நம்பியிருக்கும் குடும்பத்தை இப்படித் தவிக்கவிடலாமா?’
  ‘விவசாயத்திற்கு மழையையே நம்பியிருக்கும் நிலை’

 • 4

  (பெரும்பாலும் செயப்பாட்டுவினையாக வரும்போது) ஒன்று இப்படி நடக்கும் அல்லது நடந்திருக்கும் என்று கருதுதல்.

  ‘விபத்தில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இறந்திருப்பார்கள் என்று நம்பப்படுகிறது’
  ‘விரைவில் இந்தியப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தில் நான்காவது இடத்தைப் பிடிக்கும் என்று நம்பப்படுகிறது’