தமிழ் நமஸ்காரம் யின் அர்த்தம்

நமஸ்காரம்

பெயர்ச்சொல்

 • 1

  (கைகூப்பி அல்லது காலில் விழுந்து தெரிவிக்கும்) வணக்கம்.

  ‘அப்பா படத்தின் முன் நமஸ்காரம் செய்தான்’

 • 2

  ஒருவரை வரவேற்கும்போது அல்லது ஒருவரிடமிருந்து விடைபெறும்போது மரியாதையைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் சொல்.

  ‘‘நமஸ்காரம், உள்ளே வாருங்கள்’ என்று அவர் வரவேற்றார்’

 • 3

  மூத்தவர்களுக்குக் கடிதம் எழுதும்போது கடிதத்தின் துவக்கத்திலும் முடிவிலும் மரியாதையைத் தெரிவிக்கும் முறையில் பயன்படுத்தும் சொல்.

  ‘‘அம்மாவுக்கு என் நமஸ்காரம்’ என்பதுடன் கடிதம் முடிந்தது’
  ‘‘அப்பாவுக்கு என் நமஸ்காரங்களைத் தெரிவிக்கவும்’ என்று தம்பி கடிதத்தில் எழுதியிருந்தான்’