தமிழ் நமு யின் அர்த்தம்

நமு

வினைச்சொல்நமுக்க, நமுத்து

  • 1

    (அப்பளம், வடாம் முதலிய உணவுப் பொருள்கள் அல்லது பட்டாசு முதலியவை) ஈரம் படிந்து மொரமொரப்புத் தன்மையை அல்லது தீப்பற்றும் தன்மையை இழத்தல்.

    ‘உருளைக்கிழங்கு வறுவலைப் பாத்திரத்தில் போட்டு மூடிவைத்திருந்ததால் நமுத்துப்போகவில்லை’
    ‘மழைக் காலத்தில் பட்டாசு நமுக்காமல் இருக்குமா?’
    உரு வழக்கு ‘நமுத்துப்போன கதைகளையே திரைப்படங்களாக எடுக்கிறார்கள்’