தமிழ் நய யின் அர்த்தம்

நய

வினைச்சொல்நயந்த, நயந்து போன்ற வடிவங்கள் மட்டும்

  • 1

    (குறிப்பிட்ட காரணத்திற்காக ஒருவரிடம் பேசுதல், பழகுதல் போன்றவற்றில்) கனிவை வெளிப்படுத்துதல்.

    ‘அவன் நயந்து கேட்கும்போது நீயும் பணிவாகப் பதில் சொல்’
    ‘அவர் நயந்து பேசி நிறைய பணம் தருவதாகச் சொன்ன பிறகும் கடையை விற்பதற்கு அவன் ஒப்புக்கொள்ளவில்லை’
    ‘உண்மையை நயந்த முறையில் மேலதிகாரியிடம் எடுத்துச் சொன்னான்’