தமிழ் நரக வேதனை யின் அர்த்தம்

நரக வேதனை

பெயர்ச்சொல்

  • 1

    (சமாளிக்க முடியாத அளவுக்கான) பெருந்துன்பம்.

    ‘அவள் தன் கணவனுக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் பிரச்சினையில் சிக்கிக் கொண்டு நரக வேதனை அனுபவிக்கிறாள்’
    ‘‘படிப்பில் கொஞ்சமும் ஆர்வமில்லாத மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதென்பது நரக வேதனைதான்’ என்றார் அவர்’
    ‘மனம் ஒட்டாத வேலையைச் செய்வது நரக வேதனையாக இருக்கிறது’