தமிழ் நரம்பு யின் அர்த்தம்

நரம்பு

பெயர்ச்சொல்

 • 1

  மூளையிலிருந்து உடலின் பல பாகங்களுக்கும் உணர்ச்சிகளைக் கொண்டு செல்லும் மெல்லிய இழை.

  ‘மனித மூளை என்பது லட்சக்கணக்கான நரம்பு இணைப்புகளால் ஆனது’

 • 2

  பேச்சு வழக்கு இரத்தத்தை இருதயத்துக்கு எடுத்துச் செல்லும், தசையால் ஆன மெல்லிய குழாய்.

  ‘கையை இறுக்கிப் பிடித்தும் ஊசி போடுவதற்கு ஒரு நரம்பும் கிடைக்கவில்லை’

 • 3

  (வீணை போன்ற இசைக் கருவிகளில் முன்பு பயன்படுத்திய) விலங்கின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட நாண்.

 • 4

  இலையின் அடிப்பரப்பில் காணப்படும், நீரைக் கொண்டுசெல்லும் மெல்லிய கம்பி போன்ற பகுதி.

  ‘வெற்றிலையின் நரம்பைக் கிள்ளி எறிந்தார்’