தமிழ் நீரோட்டம் யின் அர்த்தம்

நீரோட்டம்

பெயர்ச்சொல்

 • 1

  (கடல், ஆறு போன்றவற்றில்) விசையோடு செல்லும் நீரின் இயக்கம்.

  ‘ஆற்றின் நடுவே நீரோட்டம் அதிகமாக இருக்கும், ஜாக்கிரதையாக நீந்து’
  உரு வழக்கு ‘தேசிய நீரோட்டத்தில் இளைஞர்கள் பங்குபெற வேண்டும்’

 • 2

  (வைரம் போன்றவற்றில்) ஓடும் நீர் போலத் தோற்றமளிக்கும் ஒளி.

 • 3

  (ரூபாய் நோட்டு, தாள் முதலியவற்றில்) வெளிச்சத்திற்கு எதிராக வைத்துப் பார்த்தால் மட்டுமே புலப்படக் கூடிய வகையில் பதிக்கப்பட்டிருக்கும் உருவம் அல்லது எழுத்து.