தமிழ் நறுக்கு யின் அர்த்தம்

நறுக்கு

வினைச்சொல்நறுக்க, நறுக்கி

 • 1

  (காய்கறி, பழம் முதலியவற்றைக் கத்தி போன்றவற்றால் சிறுசிறு துண்டுகளாக) வெட்டுதல்; அரிதல்.

  ‘சமைப்பதற்கு முன் இஞ்சி, பச்சைமிளகாய் ஆகியவற்றைப் பொடிப்பொடியாக நறுக்கிக்கொண்டாள்’
  ‘குழந்தைகளுக்கு மாம்பழம் நறுக்கிக் கொடு’

தமிழ் நறுக்கு யின் அர்த்தம்

நறுக்கு

பெயர்ச்சொல்

 • 1

  (ஓலை, புகையிலை போன்றவற்றின் நறுக்கப்பட்ட) துண்டு.

  ‘இலை நறுக்கு’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு (தாள் முதலியவற்றின்) சிறு துண்டு.

  ‘அடையாளமாகப் புத்தகத்தில் ஒரு நறுக்கு வைத்துவிடு’