தமிழ் நறுக்கென்று யின் அர்த்தம்

நறுக்கென்று

வினையடை

  • 1

    (குட்டுதல், கிள்ளுதல் குறித்து வரும்போது) சுள்ளென்று வலிக்கும் படியாக.

    ‘அம்மாவை எதிர்த்துப் பேசிய தம்பியின் தலையில் அக்கா நறுக்கென்று குட்டினாள்’

  • 2

    (பேச்சைக் குறித்து வரும்போது) சுருக்கென்று படும்படியாக; மனத்தில் பதியும்படியாக.

    ‘அவர் பேசியதைக் கேட்டதும் நறுக்கென்று நாலு வார்த்தை சொல்ல வேண்டும் போல் இருந்தது’