தமிழ் நல்கு யின் அர்த்தம்

நல்கு

வினைச்சொல்நல்க, நல்கி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (பெரும்பாலும் பொருள் அல்லாத பிறவற்றை) அளித்தல்; வழங்குதல்; தருதல்.

    ‘இந்தப் புதிய திட்டம் மக்களுக்குப் பெரும் பயனை நல்கும்’
    ‘புத்தகம் வெளிவரப் பல வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய நண்பர்களுக்கு நன்றி’