தமிழ் நலங்கு யின் அர்த்தம்

நலங்கு

பெயர்ச்சொல்

  • 1

    திருமணத்தில் மணமக்களை அமரச் செய்து சந்தனம் முதலியவை பூசி, குடத்தில் இட்ட மோதிரத்தை எடுத்தல், தேங்காயை உருட்டுதல் போன்ற (மகிழ்ச்சி தரும்) சில விளையாட்டுகளை விளையாடச் செய்யும் சடங்கு.

  • 2

    நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு போன்ற மங்கல நிகழ்ச்சிகளின்போது மணப்பெண் அல்லது கருவுற்ற பெண்ணுக்குச் சந்தனம் போன்றவற்றைத் தடவிப் பெரியவர்கள் ஆசீர்வதிக்கும் சடங்கு.