தமிழ் நலம் யின் அர்த்தம்

நலம்

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  (ஒருவருடைய ஆரோக்கியத்தில்) நல்ல நிலை; சுகம்.

  ‘‘நான் நலம், தங்கள் நலம் அறிய ஆவல்’ என்று கடிதம் தொடங்கியது’
  ‘ஆண்டவன் கிருபையால் என் பிள்ளைகள் அனைவரும் நலமாக இருக்கின்றனர்’
  ‘நாங்கள் நலமாக ஊர் போய்ச் சேர்ந்தோம்’

 • 2

  நன்மை; நல்லது.

  ‘அவர் நாட்டு மக்களின் நலத்துக்காகப் பாடுபட்டவர்’
  ‘சமூகத்தின் நலம் கருதியே அரசு இந்த முடிவை மேற்கொண்டது’
  ‘சுதந்திர தினத்தன்று பல்வேறு நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன’

 • 3

  உயர் வழக்கு நல்லது.

  ‘நீங்கள் உடனே சென்று அவரைப் பார்ப்பது நலம்’
  ‘வீட்டின் வாசல் தெற்கு நோக்கி அமைந்திருப்பது நலம்’

தமிழ் நீலம் யின் அர்த்தம்

நீலம்

பெயர்ச்சொல்

 • 1

  வானம், கடல் முதலியவற்றில் உள்ளது போன்ற நிறம்.

 • 2

  (வெள்ளைத் துணிகளைப் பளிச்சிடச்செய்வதற்காக நீரில் கரைத்துப் பயன்படுத்தும்) நீல நிறப் பொடி அல்லது திரவம்.

 • 3

  காண்க: நீலக்கல்

தமிழ் நீலம் யின் அர்த்தம்

நீலம்

பெயர்ச்சொல்

 • 1

  தடித்த, சற்றுக் கசப்புத் தன்மை கொண்ட தோலை உடைய ஒரு வகை மாம்பழம்.