தமிழ் நல்லது யின் அர்த்தம்

நல்லது

பெயர்ச்சொல்

 • 1

  நன்மை.

  ‘ஊருக்கு நல்லது செய்ய ஆள் இல்லை’
  ‘ஊர்பேர் தெரியாதவர் உனக்கு ஒரு நல்லது செய்துவிட்டுப் போயிருக்கிறார்’
  ‘எல்லாப் பொதுக் காரியத்திலும் நாலு நல்லது இருந்தால், இரண்டு கெட்டதும் இருக்கும்’

 • 2

  நன்மை தரும் நிகழ்ச்சி.

  ‘இந்த வீட்டுக்கு வந்த பிறகு எல்லாம் நல்லதாகவே நடக்கிறது’

 • 3

  நன்மை விளைவிப்பது.

  ‘நான் சொல்கிறபடி நடப்பதுதான் உனக்கு நல்லது’
  ‘நீ ஊருக்கு இப்போதே புறப்படுவதுதான் நல்லது’
  ‘இன்னும் இரண்டு நாள் மருந்து சாப்பிடுவது நல்லது’

தமிழ் நல்லது யின் அர்த்தம்

நல்லது

இடைச்சொல்

 • 1

  (உரையாடலில்) இசைவைத் தெரிவிப்பதற்கு இரண்டு வாக்கியங்களைத் தொடர்புபடுத்தப் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘‘நான் போய்வரட்டுமா?’ ‘நல்லது, போய் வாருங்கள்’’
  ‘‘உங்கள் பெண்ணுக்குத் திருமணம் என்று கேள்விப்பட்டேன். நல்லது! அப்புறம் வேறு என்ன செய்தி?’’