தமிழ் நல்ல வேளை யின் அர்த்தம்

நல்ல வேளை

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    தீங்கு நடக்காமல் ஒருவரைத் தப்பிக்கவைத்த அதிர்ஷ்டம்; நல்ல காலம்.

    ‘நல்ல வேளையாக அவர் வந்தபோது நீ இங்கு இல்லை; இருந்திருந்தால் வசமாக மாட்டிக்கொண்டிருப்பாய்’
    ‘நல்ல வேளை, விபத்திலிருந்து எப்படியோ தப்பித்துவிட்டீர்கள்’
    ‘ரயிலில் என் பெட்டி திருடுபோய்விட்டது. நல்ல வேளை, பையில் கொஞ்சம் பணம் வைத்திருந்தேன்’