தமிழ் நல்வழிப்படுத்து யின் அர்த்தம்

நல்வழிப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

 • 1

  (தவறான வழியில் செல்லும் ஒருவருக்கு) ஒழுக்கம், பண்பு, நேர்மை ஆகியவற்றைப் போதித்து நல்ல முறையில் நடக்கச் செய்தல்.

  ‘மாணவர்களை நல்வழிப்படுத்துவது ஆசிரியரின் கடமை அல்லவா?’
  ‘செய்த தவறை எண்ணி வருந்துபவனை மன்னித்து நல்வழிப்படுத்துவது சிறந்த செயலாகும்’
  ‘மக்களை நல்வழிப்படுத்துவதற்காகவே நீதிக்கதைகள் உருவாயின’
  ‘தீய வழியில் செல்லும் கணவனை நல்வழிப்படுத்தும் பெண்ணின் கதை’