தமிழ் நலி யின் அர்த்தம்

நலி

வினைச்சொல்நலிய, நலிந்து

 • 1

  மோசமான நிலைக்குத் தாழ்தல்; வீழ்ச்சியடைதல்.

  ‘தந்தை இறந்த பிறகு நலிந்துபோன அந்தக் குடும்பம் இப்போதுதான் தலையெடுத்திருக்கிறது’
  ‘நலிந்த நிலையில் இருக்கும் தொழிற்சாலைகளை மீண்டும் துவக்க அரசு உதவிபுரிய வேண்டும்’
  உரு வழக்கு ‘நலிந்துபோன மதிப்பீடுகள்’

 • 2

  (நோய் போன்றவற்றால்) உடல்கட்டு குலைதல்; மெலிதல்.

  ‘தொடர்ந்து நோயால் பீடிக்கப்பட்டதால் உடம்பு நலியத் தொடங்கிவிட்டது’

தமிழ் நீலி யின் அர்த்தம்

நீலி

பெயர்ச்சொல்

தகுதியற்ற வழக்கு
 • 1

  தகுதியற்ற வழக்கு (பெரும்பாலும் வசைச்சொல்லாக) (ஒருவருக்கு) தீங்கு செய்யும் உள்நோக்கத்தோடு நாடகமாடும் பெண்.

  ‘அந்த நீலி சொல்வதைக் கேட்டுக்கொண்டு என்னைத் திட்டுகிறாயா?’