தமிழ் நல்ல யின் அர்த்தம்

நல்ல

பெயரடை

 • 1

  (மனிதர்களிடம்) எதிர்பார்க்கப்படும் ஒழுங்கு, முறை முதலியவை கொண்டு அமைந்த/(பிறவற்றில்) மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தரக்கூடிய தன்மை கொண்ட.

  ‘நல்ல பையன்’
  ‘நல்ல பெண்’
  ‘நல்ல அதிகாரி’
  ‘நல்ல இசை’
  ‘நல்ல சாப்பாடு’
  ‘நல்ல வீடு’

 • 2

  நன்மை விளைவிக்கும்.

  ‘நல்ல சகுனம்’
  ‘நல்ல எண்ணம்’
  ‘நல்ல செய்தி’
  ‘நாளைக்கு நல்ல நாள்; நீ வியாபாரத்தைத் தொடங்கலாம்’
  ‘தானியத்தைச் சந்தையில் விற்றால் நல்ல விலை கிடைக்கும்’
  ‘இந்த மாதத்தில் 10, 19, 28 ஆகியவை நல்ல தேதிகளாகும்’
  ‘துணிச்சலும் போராடும் குணமும் உள்ள இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது’

 • 3

  (நடத்தை, செயல்பாடு முதலியவற்றைக் குறித்து வரும்போது) தீயதாக இல்லாத; பாராட்டத் தகுந்த.

  ‘நல்ல குணம்’
  ‘நல்ல பழக்கம்’
  ‘நல்ல பெயர்’

 • 4

  குறைகள் இல்லாத; பயன்பாட்டுக்கு ஏற்ற தன்மை கொண்ட.

  ‘நல்ல காற்று’
  ‘நல்ல காய்கறி’
  ‘நல்ல பேனா’

 • 5

  சரியான; பொருத்தமான.

  ‘நல்ல சமயத்தில் வந்து சேர்ந்தாய்’

 • 6

  இயல்பான அளவுக்கும் அதிகமான.

  ‘நல்ல பசி’
  ‘நல்ல மழை’
  ‘ஆள் நல்ல உயரம்’

 • 7

  (கலை, இலக்கியம் முதலியவற்றைக் குறிப்பிடும்போது) சிறந்த.

  ‘புதுமைப்பித்தன் ஒரு நல்ல எழுத்தாளர்’
  ‘நல்ல திரைப்படங்கள் தமிழில் எப்போதாவதுதான் வருகின்றன’
  ‘பிரமாதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் மொத்தத்தில் நல்ல கச்சேரிதான்’

 • 8

  குறிப்பிடத்தக்க வகையிலான.

  ‘பதினாறாம் நூற்றாண்டிலேயே இந்த இசைக்கு நல்ல மதிப்பு ஏற்பட்டுவிட்டது’
  ‘இந்தப் பூங்காக்கள் குழந்தைகளுக்கு நல்ல பொழுதுபோக்காக விளங்குகின்றன’