தமிழ் நீள் யின் அர்த்தம்

நீள்

வினைச்சொல்நீள, நீண்டு

 • 1

  (ஒரு பொருள்) இருக்கும் அளவிலிருந்து நீளமாக ஆதல்.

  ‘முதலில் தோன்றும் வேர் நீண்டு ஆழமாகச் செல்வதால் தாவரம் உறுதியாக ஊன்றி நிற்க முடிகிறது’
  ‘தண்டுப்பகுதி குறுகி நீண்டு வளரும்’
  ‘பழுக்கக் காய்ச்சி அடித்தால்தான் கம்பி நீளும்’
  ‘இழுத்தால் நீளுவது ரப்பரின் இயல்பு’

 • 2

  (தலை, கை, கால் போன்ற உடல் உறுப்பு) இருக்கும் நிலையிலிருந்து முன்னோக்கி எழுதல் அல்லது மேலெழுதல்.

  ‘பையிலிருந்து காசை எடுப்பதற்குள் பல பிச்சைக்காரர்களின் கரங்கள் நீண்டன’
  ‘புற்றிலிருந்து பாம்பின் தலை மெதுவாக நீண்டது’

 • 3

  (கால அளவில் ஒரு செயல் அல்லது நிகழ்வு) அதிகரித்தல்; தொடர்தல்.

  ‘நன்றியுரை நீண்டுகொண்டே போனதில் கூட்டம் முடிய நேரமாகிவிட்டது’
  ‘நான் எதிர்பார்த்ததைவிடக் கட்டுரை அதிகமாக நீண்டுவிட்டது’
  ‘குளிர் காலத்தில் பகல் குறைந்தும் இரவு நீண்டும் இருக்கும்’

தமிழ் நீள் யின் அர்த்தம்

நீள்

பெயரடை

 • 1

  (பெரும்பாலும் வடிவங்களைக் குறிக்கும் சொற்களுக்கு அடையாக வரும்போது) பக்கவாட்டில் நீண்டு செல்கிற.