தமிழ் நீளம் யின் அர்த்தம்

நீளம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  இரண்டு பரிமாணங்களைக் கொண்டிருக்கும் ஒரு வடிவத்தில் ஒரு அளவைவிட அதிகமாக இருக்கும் மற்றொரு அளவு/(கம்பி, நூல் போன்றவற்றில்) இரு முனைகளுக்கு இடையே உள்ள அளவு.

  ‘அறையின் நீளம் பன்னிரண்டு அடி, அகலம் பத்து அடி’
  ‘பெட்டியைக் கட்டுவதற்கு இந்தக் கயிற்றின் நீளம் போதாது’
  ‘இந்தச் சண்டைக் காட்சி படத்தில் நூறு அடி நீளம் வருகிறது’
  ‘கங்கையின் மொத்த நீளம் 8047 கி.மீ. ஆகும்’

 • 2

  சராசரி நீளத்தைவிட அதிகம்.

  ‘நீளமாகத் திரிக்கப்பட்ட கயிறு’
  ‘சட்டையின் கையை நீளமாகத் தைத்துவிட்டாயே?’
  ‘நீளமான சாலை’
  ‘நீளமான கதை’
  ‘அவளுக்கு நீளமான கூந்தல்’

 • 3

  காண்க: கைநீளம்

 • 4

  காண்க: நாக்கு நீளம், வாய்நீளம்.