தமிழ் நளினம் யின் அர்த்தம்

நளினம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (பெண்ணின் அசைவுகளில் அல்லது தோற்றத்தில் உள்ள) மனத்தைக் கவரும் மென்மை.

  ‘அவள் ஆடை அணிவதில் ஒரு நளினம் இருந்தது’
  ‘அவளுடைய நளினமான பேச்சு’

 • 2

  (வேலையைச் செய்வதில்) நேர்த்தி; லாவகம்.

  ‘அவர் வெற்றிலைக் காம்பைக் கிள்ளுவதில்கூட ஒரு நளினம் இருக்கும்’
  ‘நளினமாகச் செய்ய வேண்டிய காரியத்தை இப்படியா முரட்டுத்தனமாகச் செய்வது?’