தமிழ் நழுவு யின் அர்த்தம்

நழுவு

வினைச்சொல்நழுவ, நழுவி

 • 1

  தடுப்போ பிடிப்போ இல்லாததால், இருக்கும் நிலையிலிருந்து மெல்ல விலகுதல் அல்லது சரிதல்.

  ‘தோளில் இருந்த துண்டு நழுவித் தரையில் விழுந்தது’
  ‘இடுப்பிலிருந்த குடம் நழுவிக் கீழே விழுந்தது’
  உரு வழக்கு ‘நிமிடங்கள் நழுவின’

 • 2

  மாட்டிக்கொள்ளாமல் தப்பித்தல்.

  ‘ஆசிரியரின் கண்ணில் படாமல் நழுவினான்’
  உரு வழக்கு ‘நீ பிரச்சினையிலிருந்து நழுவப் பார்க்கிறாய்’

 • 3

  (வாய்ப்பு, வெற்றி முதலியவை) கிடைப்பது போல் இருந்து கிடைக்காமல் போதல்; தவறுதல்.

  ‘மலிவு விலையில் துணி கிடைக்கும் இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!’
  ‘கிடைக்க இருந்த நல்ல வேலை என்னுடைய கவனக் குறைவால் நழுவிப்போய்விட்டது’
  ‘கடுமையாகப் போராடிய சானியா மிர்சா போட்டியின் கடைசி நேரத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார்’

 • 4

  இருக்கும் இடத்தை விட்டு எலும்பு மூட்டு சற்று விலகுதல்; பிசகுதல்.

  ‘கீழே விழுந்ததில் கால் மூட்டு நழுவிவிட்டது’