தமிழ் நவக்கிரகம் யின் அர்த்தம்

நவக்கிரகம்

பெயர்ச்சொல்

 • 1

  (சோதிடத்தில்) சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய ஒன்பது கிரகங்கள்.

 • 2

  (சிவன் கோயில்களில் ஒரே பீடத்தில் ஒன்றை ஒன்று பார்க்காமல் நிற்கும்) மேற்குறிப்பிட்ட ஒன்பது கிரகங்களின் சிலைகள்.

  ‘சில பழங்காலச் சிவன் கோயில்களில் நவக்கிரகச் சன்னிதி கிடையாது’
  ‘நவக்கிரகங்களுக்கு அபிஷேகம் நடந்துகொண்டிருந்தது’
  உரு வழக்கு ‘இந்த வீட்டில் அப்பா, பிள்ளைகள் எல்லாரும் நவக்கிரகங்கள்தான்’