தமிழ் நீவு யின் அர்த்தம்

நீவு

வினைச்சொல்நீவ, நீவி

 • 1

  (உடலின் பகுதியை விரலால்) சற்று அழுத்தித் தடவுதல்.

  ‘தண்ணீரைக் குடிக்கும்போது புரையேறியதும் முதுகில் தட்டி நெஞ்சை நீவிவிட்டாள்’

 • 2

  (தாள், துணி போன்றவற்றைச் சுருக்கம் போகும்படி விரலால்) அழுத்தி இழுத்தல்.

  ‘புத்தகத்தின் பக்கத்தை நீவி விட்டுக்கொண்டே படிப்பது சிலரின் பழக்கம்’
  ‘சேலையில் கொசுவ மடிப்பைப் பலமுறை நீவி விட்டுக்கொண்டாள்’