தமிழ் நஷ்டப்படு யின் அர்த்தம்

நஷ்டப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    நஷ்டம் அடைதல்.

    ‘திரைப்படம் எடுத்து நஷ்டப்பட்ட தயாரிப்பாளர் ஒருவர் இப்போது பழக்கடை வைத்திருக்கிறார்’
    ‘ஆடம்பரமாகத் திருமணம் செய்வதால் நஷ்டப்படுபவர்கள் பெண் வீட்டுக்காரர்கள்தான்’
    ‘நீ கேட்கும் விலைக்கு வீட்டை விற்றுவிட்டு நான் நஷ்டப்பட முடியாது’