தமிழ் நஷ்டம் யின் அர்த்தம்

நஷ்டம்

பெயர்ச்சொல்

 • 1

  (தொழிலில் வரவைவிடச் செலவு அதிகமாவதாலோ வர வேண்டிய தொகை வராததாலோ உண்டாகும்) இழப்பு; பொருள் இழப்பு.

  ‘எதிர்பார்த்தபடி விளைச்சல் இல்லாததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது’
  ‘பங்குகளின் விலையில் ஏற்பட்ட சரிவால் அவருக்குப் பெருத்த நஷ்டம்’

 • 2

  (பணம், நேரம், உழைப்பு முதலியவை) வீணாகும் நிலை; விரயம்.

  ‘அவனுக்கு வேலை தேடி அலைந்ததில் எனக்குத்தான் பணமும் நேரமும் நஷ்டம்’
  ‘என்னோடு பேசுவதில் உனக்கென்ன நஷ்டம்?’
  ‘அண்டை நாடு இந்த உடன்பாட்டை ஏற்றுக்கொள்ளாவிட்டால் இந்தியாவுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை’
  ‘நீ கோபித்துக்கொண்டு போவதால் யாருக்கு நஷ்டம்?’