தமிழ் நாக்கு யின் அர்த்தம்

நாக்கு

பெயர்ச்சொல்

 • 1

  (பேசுவதற்கும் உணவைச் சுவைப்பதற்கும் பயன்படும்) வாயின் நடுவில் அமைந்திருக்கும், அசையக்கூடிய, எலும்பில்லாத உறுப்பு.

  ‘நாக்கைத் தொங்கப்போட்டவாறு உட்கார்ந்திருந்தது அந்த நாய்’
  ‘‘ள’ என்ற எழுத்தை உச்சரிக்கும்போது நாக்கின் நுனி மேல் அண்ணத்தில் படுகிறது’

 • 2

  (ஆட்டுவதன்மூலம் அடித்து ஒலியெழுப்புவதற்காக மணியினுள்) தொங்கவிட்டிருக்கும், அசையக் கூடிய உலோகத் துண்டு.

 • 3

  மை ஊற்றி எழுதும் பேனாவில் முள்ளைத் தாங்கியிருக்கும் பகுதி.