தமிழ் நாக்கு நீளம் யின் அர்த்தம்

நாக்கு நீளம்

பெயர்ச்சொல்

 • 1

  சுவையான உணவை உண்பதில் அதிக நாட்டம்.

  ‘தினமும் இரண்டு கறி இல்லாமல் என் பையன் சாப்பிட மாட்டான். அவனுக்கு நாக்கு நீளம்’

 • 2

  வரம்பு மீறிய பேச்சு.

  ‘உனக்கு நாக்கு நீளம். இல்லாவிட்டால் பெரியவர்களை இப்படி எடுத்தெறிந்து பேசுவாயா?’
  ‘மாமாவுக்குக் கொஞ்சம் நாக்கு நீளம்; பொறுத்துக்கொள்’