தமிழ் நாக்கைப் பிடுங்கிக்கொள் யின் அர்த்தம்

நாக்கைப் பிடுங்கிக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (அவமானம் தாங்காமல்) உயிரை விடுதல்.

    ‘உன் மகனைப் பற்றி இப்படியெல்லாம் கேள்விப்படுவதைவிட நாக்கைப் பிடுங்கிக்கொள்ளலாம்’
    ‘நீ இப்படி ஒரு கேவலமான பிழைப்பு பிழைப்பதைப் பார்க்கும்போது எனக்கு நாக்கைப் பிடுங்கிக்கொள்ள வேண்டும்போல் இருக்கிறது’