தமிழ் நாங்கள் யின் அர்த்தம்

நாங்கள்

பிரதிப்பெயர்

 • 1

  பேசுபவர் முன்னிருப்பவரை உட்படுத்தாத தன்மைப் பன்மைப் பிரதிப்பெயர்.

  ‘நாங்கள் ஊருக்குப் போவதாக இருக்கிறோம். நீங்களும் வருகிறீர்களா?’
  ‘நாங்களும் வீட்டுக்குக் கிளம்ப வேண்டியதுதான்’
  ‘நாங்கள் ஒன்றும் பணக்காரர்கள் இல்லை’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு (யாழ்ப்பாணத்தில்) முன்னிருப்பவரையும் உள்ளடக்கிய தன்மைப் பன்மைப் பிரதிப்பெயர்; நாம்.

  ‘நாங்கள் நாளைக்கு இந்த வேலையைச் செய்வோம், சரியா?’