தமிழ் நாசம் யின் அர்த்தம்

நாசம்

பெயர்ச்சொல்

 • 1

  (இயற்கைச் சக்திகளால் அல்லது ஆயுதங்களால் ஏற்படும்) பேரழிவு; (பெருத்த) சேதம்.

  ‘தொடர்ந்து பெய்த அடைமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் நாசம்’
  ‘கலகக்காரர்கள் கடைகளையெல்லாம் அடித்து நொறுக்கி நாசம்செய்தனர்’

 • 2

  சீரழிவு.

  ‘இந்தக் குடும்பம் நாசமானதற்கு அவருடைய குடிப்பழக்கம்தான் காரணம்’