தமிழ் நாசூக்கு யின் அர்த்தம்

நாசூக்கு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒருவரின் பழக்க வழக்கத்தைக் குறிக்கும்போது) மென்மை; பிறர் மனத்தைப் புண்படுத்தாத தன்மை; நயம்.

  ‘நண்பன் செய்ய முன்வந்த பண உதவியை நாசூக்காக மறுத்துவிட்டேன்’
  ‘குடும்பக் கட்டுப்பாட்டைப் பிரபலப்படுத்த அரசு நாசூக்கான வழிகளைக் கையாள்கிறது’
  ‘அவர் சாப்பிட்டுவிட்டு நாசூக்காகக் கைக்குட்டையால் வாயைத் துடைத்துக் கொண்டார்’
  ‘அவரிடம் வாங்கிய பணத்தைத் திருப்பித் தரவில்லை என்பதைக் கடிதத்தில் மிக நாசூக்கான முறையில் குறிப்பிட்டிருந்தார்’