தமிழ் நாடகத்தனம் யின் அர்த்தம்

நாடகத்தனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (கதை, திரைப்படம், பேச்சு போன்றவை) யதார்த்தமாக இல்லாமல் நாடகத் தன்மையுடன் இருக்கும் நிலை.

    ‘படத்தில் காட்சிகள் நாடகத்தனமாக இருப்பதால் சலிப்பூட்டுகின்றன’
    ‘மேடையில் நாடகத்தனமாகப் பேசினால்தான் மக்களிடம் எடுபடும்’