தமிழ் நாட்டுடமையாக்கு யின் அர்த்தம்

நாட்டுடமையாக்கு

வினைச்சொல்-ஆக்க, -ஆக்கி

  • 1

    அரசுடமையாக்குதல்.

    ‘பல்வேறு தொழில்களை நாட்டுடமையாக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் இருக்கிறது’

  • 2

    (பெரும்பாலும் இலக்கியப் படைப்புகளின் காப்புரிமையை) அரசு வாங்கிப் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கிடைக்கச் செய்தல்.

    ‘புதுமைப்பித்தன் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன’