தமிழ் நாடா யின் அர்த்தம்

நாடா

பெயர்ச்சொல்

 • 1

  (உடம்பில் கட்டிக்கொள்ள உடையோடு இணைக்கப்பட்டிருக்கும் அல்லது ஒரு பொருளைத் தொங்கவிட இணைக்கப்பட்டிருக்கும்) துணிப் பட்டை.

  ‘நாடா வைத்துத் தைத்த பைஜாமா’
  ‘வண்ண நாடாவில் தங்கப் பதக்கம் கோக்கப்பட்டிருந்தது’

 • 2

  நவீனத் தொழில்நுட்பத்தில் ஒலி, ஒளி அல்லது தகவலைச் சேமித்துவைக்கப் பயன்படும் பட்டையான மிக மெல்லிய பிளாஸ்டிக் இழை.

  ‘ஒலிநாடாவிலும் ஒளிநாடாவிலும் உள்ள நாடாக்களில் காந்தப் பூச்சு பூசப்பட்டிருக்கும்’
  ‘மின்காந்த நாடா’

 • 3

  தட்டச்சுப்பொறியிலும் கணினியின் அச்சுப் பொறியிலும் பயன்படுத்தப்படும் மை பூசப்பட்ட மெல்லிய துணிப் பட்டை.

 • 4

  வட்டார வழக்கு (அரிக்கன் விளக்கின்) பட்டையான திரி.

  ‘வெளிச்சம் போதவில்லை, நாடாவைக் கொஞ்சம் உயர்த்திவிடு’

 • 5

  (தையல்காரர் அளவெடுப்பதற்காகப் பயன்படுத்தும்) அளவு குறிக்கப்பட்ட, சுருட்டிவைக்கக்கூடிய சாதனம்.

 • 6

  தறியின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்துக்குப் பாவின் ஊடே இழையைக் கொண்டுசெல்லச் செலுத்தப்படும் ஓடம் போன்ற சிறு சாதனம்.