தமிழ் நாடி பிடித்துப்பார் யின் அர்த்தம்

நாடி பிடித்துப்பார்

வினைச்சொல்-பார்க்க, -பார்த்து

  • 1

    (ஒரு சூழ்நிலையின் தன்மையை) அறிந்துகொள்ள முற்படுதல்.

    ‘புதிய வியாபாரம் தொடங்குவதற்கு முன்பே சந்தை நிலவரத்தை நாடி பிடித்துப்பார்க்க வேண்டாமா?’
    ‘விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறப்போவதால் மக்களின் கருத்து என்னவென்று நாடி பிடித்துப்பார்ப்பதில் எல்லா அரசியல் கட்சிகளும் ஆர்வம் காட்டுகின்றன’