தமிழ் நாடி விழு யின் அர்த்தம்

நாடி விழு

வினைச்சொல்விழ, விழுந்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (எதிர்பாராத ஒரு செயலின் அல்லது செய்தியின் கடுமையால் அதிர்ந்து) செயலற்ற நிலைக்கு உள்ளாதல்; மனமுடைந்துபோதல்.

    ‘நம்பிக்கையோடு இருந்தவனுக்கு வேலை கிடைக்கவில்லை என்று தெரிந்ததும் நாடி விழுந்துவிட்டது’
    ‘மகன் தனிக்குடித்தனம் போகப்போகிறான் என்று கேட்டதும் அவருக்கு நாடி விழுந்துவிட்டது’
    ‘தன் கட்சி ஆட்சிக்கு வந்தால் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று கனவு கண்டுகொண்டிருந்தவருக்குத் தேர்தல் முடிவுகளைக் கேட்டதும் நாடி விழுந்துவிட்டது’